அன்னை மடி மெத்தை புகற்றிடும் பல வித்தை
பிறந்தேன் அழுதேன்!
பாரினை புரிந்தேன்!
பரவசம் அடைந்தேன்!
பணிகளை அறிந்தேன்!
பயணத்தைத் தொடர்ந்தேன்!
என் நிலை அறிந்தேன்!
எனக்கென முயன்றேன்!
ஏற்றவர் வாழ்வை!
ஏணியாய் கொண்டேன்!
ஏற்றங்கள் பெற்றேன்!
கல்வியை மதித்தேன்!
கலை பல கற்றேன்!
கற்றதை செய்தேன்!
கண்டதை படித்தேன்!
பண்டிதனானேன்!
தாகம் கொண்டேன்!
தாவிச் சென்றேன்!
தடைகளை உடைத்தேன்!
தனி வழி சமைத்தேன்!
தேன் சுவையானேன்!
பெற்றார் மதித்தேன்!
பெற்றவர் பணிந்தேன்!
மற்றவர் போற்ற!
மானிடம் சிறக்க!
மேலிடம் ஆனேன்!
ஊரவர் வாய்கள் !
உணர்ந்து புகழ் பேச!
உள்ளம் புகழ்ந்தேன்!
உண்மை ஆனேன்!
உயர்வைப் பெற்றேன்!
பிறப்பை உணர்ந்தேன்!
பேதம் மறந்தேன்!
பிழைகளை தவிர்த்தேன்!
பிணக்கினை தவிர்த்தேன்!
பிணைப்பினை ஏற்றேன்!
அன்னை மடி மெத்தை!
புகற்றிடும் பல வித்தை!
ஏற்றவர் வாழ்வதை!
பெற்றவர் உயர்வதை!
முன்னே காண்பாயதை!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
