ஊழல் பெருச்சாளிகள்

குடியரசு நாட்டில்
குடியேறியது
குறைவில்லாமல்
ஊழல் பெருச்சாளிகள் ===
ஊழல் எனும் எலி
பெருச்சாளியாய் வளர்ந்து
நாட்டையே துளை போட்டாலும்
அரசு துளையில்
பதுங்குகின்றதே தவிர
துளையை துக்க
துணிவான முயற்சிகள்
துரிதமாய் எதுவும் இல்லை .=====
வேகமாய்
வாகனம் ஓட்டினால் மிக
வேகமாய் காவல் அதிகாரிகளிடம்
பணத்தை வீசினால்
அபராதம் தள்ளுபடி
குற்றமும் தள்ளுபடி ======
கட்டிட வரைபடம்
அனுமதி சான்றிதழிர்க்கு
கட்டிடம் முக்கியமல்ல
கட்டிடம் கட்டுபவரின்
அந்தஸ்து தான் முக்கியம்.======
கட்டிடத்தின் மதிப்பை விட
பணத்தின் மதிப்பு தான் அதிகம்
தட்டி கேட்டால் வீடு கட்ட முடியாது
கனவுகள் இடிந்து விடும் ===========
தொழிற்சாலையில்
மாசுக்களுக்கு உரிமம் அளிப்பதற்கு
மாசுக்கள் அடங்கிய
அதிகாரிகள்
அவர்கள் எங்கு உரிமம் எடுத்தார்கள் ? ======
நில பதிவு தான்
நில நடுக்கத்தை ஏற்படுத்தும்
ஊழலின் தங்க சுரங்கம் =======
ஒரு நாள்
ஒரு மணி நேரம்
ஒரு ஐந்து நிமிட பணிக்கு
ஒய்யாரமாய் ஊழல் ======
தொழிற்சாலை நடத்துவதற்கு
தேவையான உரிமங்கள்
அனைத்தும் எடுக்க
தேவை உங்களுக்கு
ஊழல் பெருச்சாளிகளின் நட்பு ======
ஊழல் எனும்
விஷத்தை
உணவில் ஊட்ட ஊட்ட
விஷமே
அமிர்தமாய் மாறிய நிலை ========
பதவியால்
ஊழல் பெருகுவதில்லை !
பயத்தால் பெருகுகின்றது
பதவி போய் விடுமோ என்ற பயம் =======
ஊழல் முற்றுகைஇட்டு
புற்று நோயாய் மாற காரணம்
தொலையும் மனித நேயம் தான் =========
அழகான சமுதாயத்தை படைக்க
அழகான மூன்று மனிதர்கள்
அவர்கள்
தாய், தந்தை மற்றும் ஆசிரியர் =============
சிந்திப்போம் செயல்படுவோம் !!!!!!!!