ARULSHRI - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ARULSHRI
இடம்:  malaikkudi
பிறந்த தேதி :  04-Aug-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-May-2014
பார்த்தவர்கள்:  301
புள்ளி:  43

என்னைப் பற்றி...

Sivachariyar,kavingar

என் படைப்புகள்
ARULSHRI செய்திகள்
ARULSHRI - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2014 10:05 pm

அறிவுடனேயே பிறக்கின்றோம்
அதனுடனேதான் வளர்கின்றோம்

அறிவை உடன் நாம் கொண்டிருந்தும்
அதன் அருமை உணரா அற்பமென

அறியாமை எனும் பேரிருளில்
அமிழ்ந்து நாளும் சாகின்றோம்

அறிவால் அறியா அறிவியலா ?
அறிவாய் இதை நீ அறிவாலே

அறிவின் அறிவியல் அறிந்தவர்கள்
அறிவியல் அறிஞர் ஆகின்றார்

அறிஞர் ஆனவர் அறிவாலே
செறிவை அடைந்து பயன்பட்டார்

அறிவில் செறிவு உடைத்தாயின்
அகிலம் உய்யும் இது திண்ணம்

அறியும் வரையில் அறிந்திடுவோம்
அறிவை அறிந்து தெளிந்திடுவோம்

-- அருள் ஸ்ரீ --

மேலும்

நல்லாருக்கு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Dec-2014 10:27 am
அறிவை அறிவாய் கூறும் படைப்பு அழகு... 28-Dec-2014 11:06 pm
ARULSHRI - ARULSHRI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jun-2014 11:09 am

உழைப்பு !!!!

அப்பப்பா எத்தனை கடினம்ப்பா
கண்களில் தூக்கம் சொக்குதப்பா
உடலினில் சோர்வு தொத்துதப்பா
வயிறு பசியினால் கத்துதப்பா
காதுகள் செவிடென தோனுதப்பா
கால்கள் படுக்கையை தேடுதப்பா
துயரங்கள் இன்றுதான் வருகுதப்பா
நாளைய தினத்தில் மாறும்ப்பா
என்றெண்ணும் போதிலே மனத்திலப்பா
புது உறசாகம் பிறக்குதே உடலிலப்பா
துயரத்தை மாற்றல் நம் கையிலப்பா
உயரலாம் ஓர்நாள் எழுந்து வாப்பா

அருள் ஸ்ரீ ___

மேலும்

நன்றி 25-Dec-2014 8:49 pm
சிறப்பு தோழமையே 05-Aug-2014 8:59 pm
ஊக்கபடுத்தும் அழகான வரிகள் 05-Aug-2014 1:02 pm
தோணுதப்பா மூணு சுழி ணப்பா Rhyming 04-Aug-2014 5:48 pm
ARULSHRI - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jun-2014 10:54 am

தொடர்கதை பார்பதை விட்டு விடு பிள்ளைகள் சாப்பிட சோற்றை இடு !!!!!

நித்தமும் ஆயிரம் ஊடகங்கள்
அவற்றில் நித்தமும் ஆயிரம் நாடகங்கள்

ஊடக நாடகம் தின்ற நேரம்
நாம் இங்கு உண்ணாமல் நின்ற நேரம்

நல்லதோர் நாளிலே நாடகத்தில்
பிணத்தொடு அழுதிடும் காட்சி ஒன்று

சத்தமாய் அதைவைத்து பரத்ததனால்
இவர் வீட்டினில் சாவென்று ஊரார் வந்தார்

என்னதான் சொல்வதோ இதற்க்கு மேலே
இந்த மடமையை சொல்லவோ வார்த்தை இல்லை

நல்லவை சொல்லவும் நகைச்சுவைக்கும்
எத்தனை நிகழ்ச்சிகள் வருகுதிங்கே

நாளும் குடும்பத்தை கெடுக்க வரும்
நாடகம் நாடியே போவதெங்கே

தொடர்கதை நல்லதாய் இருந்ததென்றால் நாம் செலவிடும் நேரத்தில்

மேலும்

ARULSHRI - ARULSHRI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2014 1:15 pm

பற்றுக பற்றற்றான் தாள் !!!!

ஒருவன் வந்து போற்றுவதோ
பின்னே ஒருவன் தூற்றுவதோ

எத்தனை முறை நான் யோசித்தும்
தினையும் காரணம் புரியவில்லை

எனையே நண்பன் என்றவனும்
நீயா நண்பன் என்கின்றான்

நிலமை கொஞ்சம் இறங்கிவிடின்
ஏற இறங்கவே பார்க்கின்றான்

பற்றி இருக்கும் பணத்தால் தான்
பற்றிய நட்பும் பற்றியது

வற்றிய பணத்தின் பின்னூடே
சுற்றிய நட்பும் வற்றியது

பற்றிச் சுற்றிய பற்றெல்லாம்
வற்றிப் பற்றுகள் அற்றதனால்

பற்றுகள் அற்றவன் திருவடியை
பற்றென நானும் பற்ற வந்தேன்

ஏனைய பற்றுகள் பற்றாமல்
எந்தையே உன்னை பற்றிடவே

வற்றா உன்தன் திருவருளை
வாரி வழங்கிட வந்திடுக

மேலும்

சிறப்பான வரிகளில் வாழ்க்கையின் தத்துவ முத்துக்களாய் தங்களின் கவி , வாழ்த்துக்கள் தோழா 05-Aug-2014 9:01 pm
I USE THE SUPERLATIVE '' BEST '' 04-Aug-2014 5:51 pm
நன்றி 17-Jun-2014 6:48 am
பற்றுகள் அற்றவன் திருவடியை பற்றென நானும் பற்ற வந்தேன் ஏனைய பற்றுகள் பற்றாமல் எந்தையே உன்னை பற்றிடவே சிறப்பு நண்பரே!! 16-Jun-2014 1:37 pm
ARULSHRI - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jun-2014 1:15 pm

பற்றுக பற்றற்றான் தாள் !!!!

ஒருவன் வந்து போற்றுவதோ
பின்னே ஒருவன் தூற்றுவதோ

எத்தனை முறை நான் யோசித்தும்
தினையும் காரணம் புரியவில்லை

எனையே நண்பன் என்றவனும்
நீயா நண்பன் என்கின்றான்

நிலமை கொஞ்சம் இறங்கிவிடின்
ஏற இறங்கவே பார்க்கின்றான்

பற்றி இருக்கும் பணத்தால் தான்
பற்றிய நட்பும் பற்றியது

வற்றிய பணத்தின் பின்னூடே
சுற்றிய நட்பும் வற்றியது

பற்றிச் சுற்றிய பற்றெல்லாம்
வற்றிப் பற்றுகள் அற்றதனால்

பற்றுகள் அற்றவன் திருவடியை
பற்றென நானும் பற்ற வந்தேன்

ஏனைய பற்றுகள் பற்றாமல்
எந்தையே உன்னை பற்றிடவே

வற்றா உன்தன் திருவருளை
வாரி வழங்கிட வந்திடுக

மேலும்

சிறப்பான வரிகளில் வாழ்க்கையின் தத்துவ முத்துக்களாய் தங்களின் கவி , வாழ்த்துக்கள் தோழா 05-Aug-2014 9:01 pm
I USE THE SUPERLATIVE '' BEST '' 04-Aug-2014 5:51 pm
நன்றி 17-Jun-2014 6:48 am
பற்றுகள் அற்றவன் திருவடியை பற்றென நானும் பற்ற வந்தேன் ஏனைய பற்றுகள் பற்றாமல் எந்தையே உன்னை பற்றிடவே சிறப்பு நண்பரே!! 16-Jun-2014 1:37 pm
ARULSHRI - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2014 11:13 am

இறைவன் !!!!

புகழ்ந்து உன்னை வரம் பெறவோ
படைத்தாய் என்னை நலமாக
உழைத்து வாழும் எண்ணத்தை
விதைத்தாய் நெஞ்சில் வளமாக
எனக்காய் இத்தனை கொடுத்த உன்னை
இன்னும் தொல்லை செய்வேனொ
அதற்காய் அடியேன் வரவில்லை
ஆண்டவனே உன் சந்நிதிக்கு பின் எதற்கோ இங்கே வந்தனை நீ
என்றே என்னை பார்க்கின்றாய்
உன்னை அடிக்கடி பார்பதற்கு காரணம் தன்னை கேடகன்றாய்
எனக்கென அருள் மழை சொறிந்த உன்னை
என்றும் அனபாய் பார்த்திடவும்
என் நன்றியை சொல்லி நெகிழ்ந்திடவும்
பேரின்பம் பெற்று மகிழ்ந்திடவும்
சுந்தர சொக்கன் உனை நாடி
வந்தேன் அப்பா விரைந்தோடி
அங்கயற்கண்ணி நாயகனே
எம்மையும் கடைகண் பாரப்பா
என்றும் உன்னை பணிந்த

மேலும்

அருள்ஸ்ரீ அருமை .அருள்வான் அங்கயர்க்கண்ணி நாயகன் 04-Aug-2014 10:58 pm
ஆஹா... அருமை படமும் கவிதையும் எந்தை ஈசன் இன்முகம் கண்டேன் ஆனந்தம்...ஆனந்தம் ஆனந்தம் கொண்டேன் ஜோதி வடிவில் எங்கும் நிறைந்தான் காணக் கண்கள் கூசிட வைத்தான்... இருந்தும் கண்டேன் அவனை பலமுறை என்ன சொல்வேன் அவன் சிரத்தில் தேய்பிறை அழகின் வடிவம் உறைந்தது நெஞ்சில் - அதை எப்படி உரைப்பேன் உங்களின் முன்னில்.... 04-Aug-2014 4:46 pm
அருமயைான வரிகள் கவிஞரின் முற்போக்கு சிந்தனை கண்ணாடி போல கவி வரியில் தெரிகிறது அருமை அருமை 04-Aug-2014 3:19 pm
இறவன் புகழ் பாடும் பக்தி வரிகள்..! 15-Jun-2014 12:40 pm
ARULSHRI - ARULSHRI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-May-2014 7:30 pm

தோழி !!!!


உன்னை எழுதச் சொன்னாயே
என்னை எழுதச் செய்தவள் நீயன்றோ

ஊமை போல் நான் இருந்தாலும்
என்னை புரிந்து கொள்பவள் நீயன்றோ

எத்தனை நாட்கள் போனாலும்
என்னை நினைப்பவள் நீயன்றோ

என்னை விட என் வாழ்வினிலே
அக்கரை கொண்டவள் நீயன்றோ

உன்னை பற்றி எழுதிடவே என்னுள் ஒன்றும் இல்லையடி

உணர்ச்சியினால் நான் அழுதாலும்
உன்மடி என்தன் தாயின் மடி


!!!அருள் ஸ்ரீ!!!!!

மேலும்

அருமை பதிவு. 15-Jun-2014 12:00 pm
1.அக்கரை கொண்டவள், 2.உணர்ச்சியினால் நான் அழுதாலும் உன்மடி என்தன் தாயின் மடி -----------------------நல்ல வரிகள் 3.இறைவியை தோழியாய் பாவிக்கும் உம பக்தியில் வியந்தேன் 15-Jun-2014 11:41 am
நன்றி 20-May-2014 3:15 am
நன்று! 19-May-2014 11:26 pm
ARULSHRI - ARULSHRI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-May-2014 3:20 pm

காவியத் தலைவன் என் தமிழன் !!!!!


உலகம் முழுதும் என் தமிழன்
உலகை வென்றான் என் தமிழன்
நட்பின் இலக்கணம் என் தமிழன் நன்றியில் நின்றவன் என் தமிழன்

வீரம் நிறைந்தவன் என் தமிழன் பல
விந்தை புரிந்தவன் என் தமிழன்
புனிதம் மிக்கவன் என் தமிழன்
புதுமைகள் புரிந்தான் என் தமிழன்

அன்பு நிறைந்தவன் என் தமிழன் அகிம்சையால் வென்றவன் என் தமிழன்
கொடுமை கலைந்தவன் என் தமிழன் கொடுத்து சிறந்தவன் என் தமிழன் கருணை நிறைந்தவன் என் தமிழன் கவிதையாய் நின்றவன் என் தமிழன்

காதல் நிறைந்தவன் என் தமிழன்
காவியத் தலைவன் என் தமிழன்


___அருள் ஸ்ரீ___

மேலும்

நன்றி 19-May-2014 6:56 pm
காவியத் தலைவனை வணங்குகிறேன் ...... வாழ்த்துக்கள் .... 19-May-2014 3:43 pm
ARULSHRI - ARULSHRI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-May-2014 5:56 am

ஆமை !!!!!

ஆமை ஒன்று புகுந்தலே
ஆகதேன்றே சொல்வரே
நம் நாட்டில் புகுந்த ஆமைகளை
கண்டு நகர்ந்தே செல்வாரே
வேந்தர் மூவர் கண்டெடுத்து
வளர்த்து வந்த முத்தமிழை
ஆமைகள் கூட்டம் சூழ்ந்து நின்று
அறித்தே நாளும் தின்கிறதே
தாய் மொழி கற்க இயலாமை
இயற்றமிழ் நாளும் கல்லாமை
இசையில் பயிற்சி கொல்லாமை
நாடக தமிழே இல்லாமை
இத்தனை ஆமைகள் விரட்டிடவும்
அமுதத்தமிழை காத்திடவும்
எங்கும் இருக்கும் என் தமிழா
நாளும் ஒரு கவி தா தமிழா
----அருள் ஸ்ரீ ----

மேலும்

ARULSHRI - ARULSHRI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-May-2014 6:14 am

பாரதி !!!!!!
தமிழரசி தேரை நாளும் ஓட்டி வந்த சாரதி
கவிதைகளில் உணர்வுகளை கொட்டி சென்ற பாரதி
காலம் வென்ற கவிஞனுக்கு காலன் செய்த ஒரு சதி
கவிதை விட்டு தேகம் மட்டும் அடைந்ததே ஓர் நற்கதி
தோட்டம் இட்டு கவிதை எனும் விதை விதைதான் பாரதி
அதிலிருந்து முளைத்த தமிழர் அனைவருமே பாரதி
தமிழ் மொழியை கொள்ள நாளும் நடக்குதிங்கு பல சதி
கவிதை எனும் கத்தியினால் அறுத்திடுவோம் அச்சதி
கவிதைகளை எழுதி தினம் குவிக்க உண்டு நம் மதி
தமிழரசி பாதங்களே தமிழர்களின் ஓர் கதி
இளைஞர்களின் உணர்சிகளில் நின்றுவிட்ட பாரதி
நீயே வந்து மாற்ற வேண்டும் தமிழரசி தலைவிதி
----அருள் ஸ்ரீ ----

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

GURUVARULKAVI

GURUVARULKAVI

virudhunagar
kavingharvedha

kavingharvedha

madurai
மலர்91

மலர்91

தமிழகம்

இவர் பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மலர்91

மலர்91

தமிழகம்

இவரை பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே