அறிவு

அறிவுடனேயே பிறக்கின்றோம்
அதனுடனேதான் வளர்கின்றோம்

அறிவை உடன் நாம் கொண்டிருந்தும்
அதன் அருமை உணரா அற்பமென

அறியாமை எனும் பேரிருளில்
அமிழ்ந்து நாளும் சாகின்றோம்

அறிவால் அறியா அறிவியலா ?
அறிவாய் இதை நீ அறிவாலே

அறிவின் அறிவியல் அறிந்தவர்கள்
அறிவியல் அறிஞர் ஆகின்றார்

அறிஞர் ஆனவர் அறிவாலே
செறிவை அடைந்து பயன்பட்டார்

அறிவில் செறிவு உடைத்தாயின்
அகிலம் உய்யும் இது திண்ணம்

அறியும் வரையில் அறிந்திடுவோம்
அறிவை அறிந்து தெளிந்திடுவோம்

-- அருள் ஸ்ரீ --

எழுதியவர் : அருள் ஸ்ரீ (28-Dec-14, 10:05 pm)
Tanglish : arivu
பார்வை : 374

மேலே