மார்கழி

வானம் சிவக்கின்ற
நேரம்..
எங்கோ தூரத்தில்
கோவில் மணி ஓசை
மார்கழிப் பனி ..
அவள் போட்டுவைத்த
கோலத்தின் நடுவில்
பூசணிப்பூ ..
மாதங்கள் எல்லாம்
மார்கழியாகிட
வேண்டுது மனம் !

எழுதியவர் : கருணா (28-Dec-14, 10:43 pm)
Tanglish : margali
பார்வை : 89

மேலே