காமத்தால் கலைந்து போகின்ற வாழ்க்கை

மன்மத லீலையைக்
கற்கின்ற மகான்களான
இன்றைய ஆசானே !

காம வெறியில் -ஏனடா
மாணவர்களை பலி கொடுக்கிறாய் -உன்
ஆனந்த வேட்டையிலே !

தாய் வயிற்றில் தானடா -நீயும்
உயிர் பெற்றாய் -இன்று
தாரம் எது தங்கையெது-என்பதையும்
உன் காமக் கண்கள் மறைக்கின்றதா !

ஒருசில நேரம் இன்பம் காண-
மழைத் துளியில் நனைந்த
பனித்துளிகளை ஏனடா
பட்டுப் போக வைக்கின்றாய் -உன்
தாகம் தனிக்க!

பூக்களாய் அரும்புவதற்கு முன்பே -அவர்களை
அழித்து விடுகிறாயே -உன்
கேவலாமான செய்கையால் -உன்னை
நம்ப மறுக்கின்றனர் பூக்களைப் பெற்ற
பூக்காடுகள் !

உன்னை குருவென நினைக்கும்
குழந்தையையும் குமுற விடுகிறாயே -உன்
வெறிச் செயலால் வெந்து போகுதடா
சிறு பிள்ளைகளின் சரீரமடா !

அனல் போல தீபங்களை
சுட்டெரிக்காதே -உன்
தந்திரத்தை நிறைவேற்றுவதற்கு !

கொடுமைகள் எல்லாம் -உன்
வலிமைகளால் செய்து முடிக்கின்றாயா
அறிவின்மை இல்லாப் பிள்ளைகளை
அச்சுறுத்தி அடி பணிய வைத்து!

தவறுகளையெல்லாம் சரியாச் செய்து
தப்புதண்டா அறியாதவர்கள் மேலே
அபத்தமான பொய்களை சுமத்துகிறாயா !

உன் ஆசை தீர்க்க
ஆயிரம் வழிகள் உள்ள போதும் -நீ
ஏன் சிறுவர்களை சிதைக்கின்றாய் !

உன் வாழ்க்கையை -இவர்களுடன்
தொடங்கி -இவர்களின்
வாழ்வை உன்னுடனே
முடித்து விடுகிறாயே - !

தீராத மோகம் -உனை
முழுதாக தீர்த்து விடப் போகின்றது -உன்
தீமைகள் கூடவே !

லட்சணமான வாழ்வை -உன்
காமம் எனும் விசத்தால்
அவலட்சணமாக ஆக்குகிறாய் !

நீ செய்யும் இச்சை மிகு செயலை -
பொறுத்துக் கொண்டு இருக்க
அனைவரும் பூமித் தாயல்ல

உன் உரம் அடக்கி -இச்
சீரழிவுகளை முடக்கி -உனை
பூமியை விட்டு இகலோனாய்
தகர்ந்து விழும் வரை -உன்
போதையை நீக்குவார் -பல
நல்ல உள்ளம் .......

எழுதியவர் : கீர்த்தனா (28-Dec-14, 10:54 pm)
பார்வை : 204

மேலே