இறைவன்
இறைவன் !!!!
புகழ்ந்து உன்னை வரம் பெறவோ
படைத்தாய் என்னை நலமாக
உழைத்து வாழும் எண்ணத்தை
விதைத்தாய் நெஞ்சில் வளமாக
எனக்காய் இத்தனை கொடுத்த உன்னை
இன்னும் தொல்லை செய்வேனொ
அதற்காய் அடியேன் வரவில்லை
ஆண்டவனே உன் சந்நிதிக்கு பின் எதற்கோ இங்கே வந்தனை நீ
என்றே என்னை பார்க்கின்றாய்
உன்னை அடிக்கடி பார்பதற்கு காரணம் தன்னை கேடகன்றாய்
எனக்கென அருள் மழை சொறிந்த உன்னை
என்றும் அனபாய் பார்த்திடவும்
என் நன்றியை சொல்லி நெகிழ்ந்திடவும்
பேரின்பம் பெற்று மகிழ்ந்திடவும்
சுந்தர சொக்கன் உனை நாடி
வந்தேன் அப்பா விரைந்தோடி
அங்கயற்கண்ணி நாயகனே
எம்மையும் கடைகண் பாரப்பா
என்றும் உன்னை பணிந்திடவே
உள்ளம் தருவாய் நீயப்பா
அருள் ஸ்ரீ _____