தோழி

தோழி !!!!


உன்னை எழுதச் சொன்னாயே
என்னை எழுதச் செய்தவள் நீயன்றோ

ஊமை போல் நான் இருந்தாலும்
என்னை புரிந்து கொள்பவள் நீயன்றோ

எத்தனை நாட்கள் போனாலும்
என்னை நினைப்பவள் நீயன்றோ

என்னை விட என் வாழ்வினிலே
அக்கரை கொண்டவள் நீயன்றோ

உன்னை பற்றி எழுதிடவே என்னுள் ஒன்றும் இல்லையடி

உணர்ச்சியினால் நான் அழுதாலும்
உன்மடி என்தன் தாயின் மடி


!!!அருள் ஸ்ரீ!!!!!

எழுதியவர் : ARULSHRI (19-May-14, 7:30 pm)
Tanglish : thozhi
பார்வை : 92

மேலே