தொடர்கதை பார்பதை விட்டு விடு பிள்ளைகள் சாப்பிட சோற்றை இடு

தொடர்கதை பார்பதை விட்டு விடு பிள்ளைகள் சாப்பிட சோற்றை இடு !!!!!

நித்தமும் ஆயிரம் ஊடகங்கள்
அவற்றில் நித்தமும் ஆயிரம் நாடகங்கள்

ஊடக நாடகம் தின்ற நேரம்
நாம் இங்கு உண்ணாமல் நின்ற நேரம்

நல்லதோர் நாளிலே நாடகத்தில்
பிணத்தொடு அழுதிடும் காட்சி ஒன்று

சத்தமாய் அதைவைத்து பரத்ததனால்
இவர் வீட்டினில் சாவென்று ஊரார் வந்தார்

என்னதான் சொல்வதோ இதற்க்கு மேலே
இந்த மடமையை சொல்லவோ வார்த்தை இல்லை

நல்லவை சொல்லவும் நகைச்சுவைக்கும்
எத்தனை நிகழ்ச்சிகள் வருகுதிங்கே

நாளும் குடும்பத்தை கெடுக்க வரும்
நாடகம் நாடியே போவதெங்கே

தொடர்கதை நல்லதாய் இருந்ததென்றால் நாம் செலவிடும் நேரத்தில் அர்த்தமுண்டு

அர்த்தமே இல்லாத தொடரை கண்டு ஆனந்தம் கொள்வதா நாட நன்று

தொடர்கதை பார்பதை விட்டு விடு
பிள்ளைகள் சாப்பிட சோற்றை இடு

____அருள் ஸ்ரீ___

எழுதியவர் : ARULSHRI (18-Jun-14, 10:54 am)
பார்வை : 77

மேலே