மது ஒழிப்பு என்று நிறைவேறும் மனிதம் என்று காக்கப்படும்

இரவெல்லாம் அழுதுவிட்டால் இனி கண்ணீரையும் கடனாய் தான் கேட்கவேண்டும்

நினைவெல்லாம் சோகம் நிறைந்துருக்கும் நிலையில் உணவிங்கே செல்வதில்லை.

அழுதுகொண்டிருக்கும்
அன்னையை தேற்றுவதா??
பயத்தில் மிரண்டு கிடக்கும் தங்கையை பார்ப்பதா ?
தேர்வை நினைப்பதா? -உயிர் தேவையை நினைப்பதா? ..

தினம் தினம் அழுதாலும் திரும்பவும் மீட்டுகொண்டு தான் இருக்கிறோம் எங்கள் சந்தோசத்தை -எங்கள்
அன்னையின் பாசத்திலிருந்து..

எத்தணை தீபாவளிகள் வந்தாலும் எங்கள் வீடு இருண்டுதான் இருக்கும் மது எனும் இருள் சூழ்ந்து..

கல்வி ஒளியால் -நாங்கள்
வெளிச்சம் கொண்டுவரநினைத்தாலும் இரவெல்லாம் பெய்யும் எங்களின்- கண்ணீர் மழையில் அது நனைந்து போய்விடுகிறது ..

அன்றாட தேவைகளில் இப்பொழுது கண்ணீரும் சேர்ந்து கொண்டது ..

ஐந்திற்கும் பத்திற்கும் உழைக்கும் அன்னையின் தேகமோ நாளொரு வண்ணம் தேய்ந்துகொண்டிருக்கிறது ...

விட்டில் பூச்சியாய் அவள் விளக்கில் மாட்டிக்கொள்ள பற்றி எரியும் நெருப்பாய் நாங்கள் தவித்து கொண்டிருக்கிறோம் ..

இனியும் தேவையா? இந்த மது அரக்கன்

எழுதியவர் : நிஷா (18-Jun-14, 12:15 pm)
பார்வை : 178

மேலே