புதியதொரு விதி செய்வோம்
புதியதொரு விதி செய்வோம்
புதுமைகளை வாழ்வில் கொள்வோம்
புறகணிப்போம் மூட நம்பிக்கைகளை
வரவேற்போம் வாழ்வில் முன்னேற்றத்தை
களை எடுப்போம் சமுதாயத்தின் தீமைகளை
போர் தொடுப்போம், அக்ரமங்களை எதிர்த்தே
கண் விழிப்போம், மடமையை ஒழிப்போம்
காதலிப்போம் அன்பு உள்ளங்களை
அரவணைப்போம் கருணை உணர்வுகளை