பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சிகள் சிறகடித்தது
எந்தன் தோட்டத்திலே
பல வர்ணங்கள் அதன் உடம்பினிலே
மஞ்சளும், கருப்பும், நீலமும், பச்சையும்
பள, பளக்குதே, கண்ணை பறிக்குதே
பர, பரக்குதே எந்தன் விரல்களே அதை
பிடித்து கையில் வைத்து அழகு
பார்த்திடவே
பட, படக்குதே எந்தன் மனமுமே
அதை பிடித்திடும் அந்த நொடியிலே
பிடித்தேன் ஒன்றை, ஒரு நொடி
பின் பறந்தது தப்பித்தே
அதன் வழி அது சென்றது, மனம்
கொஞ்சம் சலித்தது,
பின் என் மனம் ஆறுதல் கொண்டது
பார்வைக்கு அழகு இந்த வண்ணத்து
பூச்சி, பிடிப்பது எதற்கு........
பறக்கட்டும் அது சுதந்திரமாய்,