பாரதி
பாரதி !!!!!!
தமிழரசி தேரை நாளும் ஓட்டி வந்த சாரதி
கவிதைகளில் உணர்வுகளை கொட்டி சென்ற பாரதி
காலம் வென்ற கவிஞனுக்கு காலன் செய்த ஒரு சதி
கவிதை விட்டு தேகம் மட்டும் அடைந்ததே ஓர் நற்கதி
தோட்டம் இட்டு கவிதை எனும் விதை விதைதான் பாரதி
அதிலிருந்து முளைத்த தமிழர் அனைவருமே பாரதி
தமிழ் மொழியை கொள்ள நாளும் நடக்குதிங்கு பல சதி
கவிதை எனும் கத்தியினால் அறுத்திடுவோம் அச்சதி
கவிதைகளை எழுதி தினம் குவிக்க உண்டு நம் மதி
தமிழரசி பாதங்களே தமிழர்களின் ஓர் கதி
இளைஞர்களின் உணர்சிகளில் நின்றுவிட்ட பாரதி
நீயே வந்து மாற்ற வேண்டும் தமிழரசி தலைவிதி
----அருள் ஸ்ரீ ----