நன்னெறிகள்ஆரம்ப பள்ளி மாணவர்க்கு
நன்னெறிகள் (ஆரம்ப பள்ளி மாணவர்க்கு)
-------------------
ஆண்டவன் இருப்பதை நம்பிடு
அவனை தினமும் கும்பிடு
ஆணவம் கொள்வதை விட்டிடு
அன்பின் வழியினை நாடிடு
ஜாதியும் மதமும் நமக்கெதற்கு
நிம்மதி கெடுத்திடும் தீயவை அவை
ஜாதி மதமில்லை இறைவனுக்கு
அவனியில் ஏனிவை மானிடற்கு
இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்திடு
அதில் இறைவனையும் கண்டிடு
ஆத்திசூடி படித்திடு -அதில்
வாழ்கையின் சாரம் கண்டிடு
ஓம் எனும் பிரணவ மந்திரம்
அலை ஓசையில் வருகுது -கேட்டிடு
ஓம் ஓம் ஓம்
------------------