ஆமை

ஆமை !!!!!

ஆமை ஒன்று புகுந்தலே
ஆகதேன்றே சொல்வரே
நம் நாட்டில் புகுந்த ஆமைகளை
கண்டு நகர்ந்தே செல்வாரே
வேந்தர் மூவர் கண்டெடுத்து
வளர்த்து வந்த முத்தமிழை
ஆமைகள் கூட்டம் சூழ்ந்து நின்று
அறித்தே நாளும் தின்கிறதே
தாய் மொழி கற்க இயலாமை
இயற்றமிழ் நாளும் கல்லாமை
இசையில் பயிற்சி கொல்லாமை
நாடக தமிழே இல்லாமை
இத்தனை ஆமைகள் விரட்டிடவும்
அமுதத்தமிழை காத்திடவும்
எங்கும் இருக்கும் என் தமிழா
நாளும் ஒரு கவி தா தமிழா
----அருள் ஸ்ரீ ----

எழுதியவர் : ARULSHRI (13-May-14, 5:56 am)
சேர்த்தது : ARULSHRI
Tanglish : aamai
பார்வை : 286

மேலே