நேரமில்லை
![](https://eluthu.com/images/loading.gif)
நேரமில்லை !!!!!!
நேரமில்லை இன்று நேரமில்லை
எங்கும் எதற்கும் நேரமில்லை
ஊர் கதை பேசிட நேரமுண்டு
இங்கு உன்கதை எண்ணிட நேரமில்லை
வீட்டினில் தூங்கவொ நேரமுண்டு
நாட்டிற்கு உழைத்திட நேரமில்லை
நட்போடு சுற்றிட நேரமுண்டு
நல்ல உறவோடு பேசவும் நேரமில்லை
பொழுதுகள் போக்கிட நேரமுண்டு
அதை விழுதுகள் ஆக்கிட நேரமில்லை
கண்டதை படித்திட நேரமுண்டு
தமிழ் கவிதைகள் படைத்திட நேரமில்லை
அந்நிய மொழி பேச நேரமுண்டு
நம் அன்னை மொழி பேச நேரமில்லை
நேரமில்லை இன்று நேரமில்லை
எங்கும் எதற்கும் நேரமில்லை
---அருள் ஸ்ரீ ----