பற்றுக பற்றற்றான் தாள்

பற்றுக பற்றற்றான் தாள் !!!!

ஒருவன் வந்து போற்றுவதோ
பின்னே ஒருவன் தூற்றுவதோ

எத்தனை முறை நான் யோசித்தும்
தினையும் காரணம் புரியவில்லை

எனையே நண்பன் என்றவனும்
நீயா நண்பன் என்கின்றான்

நிலமை கொஞ்சம் இறங்கிவிடின்
ஏற இறங்கவே பார்க்கின்றான்

பற்றி இருக்கும் பணத்தால் தான்
பற்றிய நட்பும் பற்றியது

வற்றிய பணத்தின் பின்னூடே
சுற்றிய நட்பும் வற்றியது

பற்றிச் சுற்றிய பற்றெல்லாம்
வற்றிப் பற்றுகள் அற்றதனால்

பற்றுகள் அற்றவன் திருவடியை
பற்றென நானும் பற்ற வந்தேன்

ஏனைய பற்றுகள் பற்றாமல்
எந்தையே உன்னை பற்றிடவே

வற்றா உன்தன் திருவருளை
வாரி வழங்கிட வந்திடுக

்!!!!அருள் ஸ்ரீ !!!!

எழுதியவர் : ARULSHRI (16-Jun-14, 1:15 pm)
பார்வை : 93

மேலே