வறுமை இளமையை அளிக்கும் அரக்கன்
வறுமை பெண்களின் இளமையினை அழிக்கும் அரக்கன் !
---------------------------------------------
அது எனக்கு மிசை அரும்பும் பருவம் !
பக்கத்து வீட்டில் பணி செய்ய
பருவமங்கை ஒருத்தி வருவாள் .
எதோ கனியில் அவர் பெயர் முடியும்
ஆம் அவளும் கனிதான் !
கரும்பலகையில் பெயர்தெடுத்த கருப்பு நிறம்
கண்கள் வெள்ளைபூண்டில் மிளகை
ஒட்டி வைத்தால் போல் ஜொலிக்கும் !
சிறிய உதடு சிரித்தால்
பவளம் கண்ணை பறிக்கும் !
அளவெடுத்த நாசி அதற்கேற்ற வட்ட முகம்
விரிந்த மார்பு சிருத்த இடை
மொத்தத்தில்
வறுமை வரைந்த வண்ண ஔவியம் !
பத்தாவது தாண்டி படித்தும் இருந்தால்
காதலிப்போமா ?
ஏற்கனவே உள்ள
காதல் கண்டித்ததாலும்
ஏழ்மையுடன் விளையாட
எண்ணம் வரததாலும் ஒதுங்கிவிட்டேன்
அதன்பின் பதிணெட்டு ஆண்டுகள்
அவளை பார்க்கவில்லை
ஒருநாள் அவளை பார்த்தேன்
இல்லை இல்லை அவள் தான்
என்னை பார்த்தால்
அண்ணா என அழைப்பு கேட்டு
பார்த்தால் ஆச்சரியம்
அவளா இவள் ?
கார் கூந்தலில்
பாதி வெண் பனி
ஒட்டிய முகம்
கருத்த இதழ்கள்
கண்கள் குழி விழுந்து
கட்டியவன் கைவிட்டதால்
மீண்டும் வறுமையுடன்
போராட்டமாய் அவள் வாழ்க்கை
நான்கு குழந்தைகள் வேறு
மூத்த குழந்தை
அதே கனியேன முடியும் பெயருடன்
அதே களை உள்ள முகத்துடன்
வறுமை பெண்களின் இளமையை
அழித்துவிடும் அரக்கன்
என்பது இதுதானோ ?