வல்லமை தாராயோ
வல்லமை தாராயோ !!!
சிந்தை தெளிந்திட
சிந்தனை பொங்கிட
தீமை களைந்திட
நன்மை புரிந்திட
தன்னிலை அறிந்திட
தமிழினை புறிந்திட
கற்பனை சிந்திட
கவிதைகள் தந்திட
காலம் வென்றிட
கலைகள் பெற்றிட
புலமை மிகுந்திட
புதுமை படைத்திட
ஈரம் நிறைந்திட
வீரம் மிகுந்திட
சோர்வினை மாய்த்திட
தரணியை ஜெய்த்திட
காலனை வென்றவனே
எனக்கு வல்லமை தாராயோ
----அருள் ஸ்ரீ - - -