காதல் சிலை

குழவித் திங்கள் குழல் ஓசையில் தென்றல் அசைய !

குவளை மலர் மேல் இசைச் சாரல் சொல் நனைய !

அந்தி மாலைப் பொழுதில் ஆசை பொழில் நறுமணமா ?

அந்தி வேலை தருணத்தில் இசைக் குயில்கள்
கானமா ?

கொடி முல்லை மொட்டுக்குள் மட்டு அமிழ்வதா ?

கொடி முந்திரிச் செடிக்குள் கூடிட்டு
மகிழ்வதா ?

கை வந்த கலை கற்றேன் காமலிலையில் !

கை வந்த சிலை ஆனேன் சிற்பவேலையில் !

எழுதியவர் : கவிஞர் வேதா (7-May-14, 1:17 pm)
சேர்த்தது : kavingharvedha
பார்வை : 145

மேலே