குடை

உன் நினைவுகளின்
மிச்சத்தின் எச்சமாய்
இருப்பது
உன் கருப்பு குடைமட்டுமே
வெயில் நாளிலே உன்
வெண்நிற மேனியை
வெயில் கண்ணில் இருந்து
மறைக்க நீ
குடை பிடித்து
நடக்கும் நளினத்தை
நான் கண்கொட்டாமல்
ரசிப்பேன்
உன் பேர் சொல்லி
நான் கூவ...
கார்மேகத்துள் மறையும்
கதிரவனாய்....
கருகுடைக்குள் உன்
முகம் மறைப்பாய்..
குடை நாணும்
அழகை கண்டு
நான் சிரிக்க
உன் கள்ளசிரிப்புக்கு
சாட்சியானது
கருப்ப குடை...
வெய்யில் நாளிலும்...
மழை நாளிலும்...
கருப்பு குடையுடன்
காத்துக்கொண்டிருக்கிறேன்
உன்னையும்,என்னையும்
குடைக்குள் நணைக்கவிருக்கும்
மழைநாளுக்காக.........

எழுதியவர் : சிந்து சாரதாமணி (7-May-14, 5:42 pm)
Tanglish : kudai
பார்வை : 85

மேலே