பேரன் குறள்கள்- 08

யோரன் குறள்படித்து யோசித்தது: =குறள் யாப்பு=

தேரினுக் கச்சாணி தேவை;அஃ தேபோல
ஊருக் குதவி இரு!--------------------------------------[01]

சொன்னசொல் கொண்டறிந்து சொல்லப் படுவார்போல்
உன்னை உயர்த்தப் படி!-------------------------------[02]

அணிலாடும் முற்றம் அழகாடும் மஞ்ஞை
பணிசேர்த்து வாழப் பழகு!---------------------------[03]

காண்மொழி ஏது,நீ கற்கினும் தாய்மொழி
மாண்பினைக் காத்து மகிழ்!-------------------------[04]

தம்புலம் விட்டுத் தனிமைகொண் டேங்குவார்
கம்பலம் நீக்கவா கண்டு!-----------------------------[05]
[கம்பலம்=துன்பம்;துயரம்]

சேணாடு சென்றுபொருள் சேர்க்கினும் உந்தன்
வாணாடு மாறாது வாழ்!------------------------------[06]

ஆற்றல் பெருக்கி அடுத்த,நாட் டில்,உழைக்க
ஏற்றம் எவர்க்கோ? எதற்கு?-------------------------[07]

குப்பைக்கோ ழிக்கோ குணமதுவாம்; மானிடரும்
தப்பைக்கொண் டாடல் தவறு!----------------------[08]

ஓரேர் உழவர்கள் ஒன்றி இருந்த,நாள்
சீரேன் இழந்தார் செழித்து!----------------------------[09]
[சீர்=சிறப்பு]

செம்புலத்து நீர்போலச் சேர்ந்தநெஞ் சங்கள்,ஏன்
வெம்புமாம் கைகள் விடுத்து?-----------------------[10]
[வெம்பும்=சினமுறும்; கலங்கும்]

=== =====

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (8-May-14, 10:54 am)
பார்வை : 119

மேலே