அவள் யார்

வெற்று பார்வையில் ..
உயிர் பற்ற வைக்கிறாள் ..
கள்ள சிரிப்பில் ..
இதயம் தனை
உடைந்து உதிர வைக்கிறாள் ..
காற்றில் கலந்து ..
நுரையீரல் பூக்க வைக்கிறாள் ..
மெய்பேசி பொய் வைக்கிறாள் ..
உதிரம் பொய்யாக செய்கிறாள்..
என் இரவுகளை ..
களவாடி ..சிறை வைக்கிறாள் ..
அவள் நினைவுகளில் ..
நடமாட ஒரு மாயை செய்கிறாள் ..
முகவரி தெரியாத அவள் ..தேடி
என் பயணம் .....
#குமார்ஸ்....