சிகரெட்டும் மதுவும்

சிகரெட்டும், மதுவும்
-------------------------------

1. புகையிது வாயில் சிகரெட்டு

உள்ளே செல்லுது நிக்கோடின் புகை

செல்லரித்து போகுது நுரையீரல்

வந்து தாக்குது புற்று நோய்

செய்வதறியாமல் தவிக்குது குடும்பம்

2. மூலை மூலை டாஸ்மாக் கடைகள்

வித வித மது பானம் விற்பனையில்

மாலை வந்தால் மொய்க்கும் மக்கள்

மது குடித்து மதி மயங்கி கிடப்பர்

பலரின் மாத வருவாய் விரயமாகுது

தள்ளாடி தள்ளாடி திரும்புவர் வீடு

தடுமாறி வீதியிலேயே படுத்து விடுவர்

நித்தம் நித்தம் இந்த வேதனை

குடும்பத்தாருக்கு பெரும் சோதனை

குடிக்கும் உடலை தாக்குது புற்று நோய்

மீளாகதி அடையும் மனிதர்

சீரழிந்து போகும் குடும்பம்

என்று மாறும் இந்த நிலை

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-தமிழ்பி (8-May-14, 3:30 pm)
பார்வை : 58

மேலே