பணம் தரும் விருந்து

வலிந்து நளிந்து
மனமுவந்து
வாழ்வில் உயர்ந்து
நிற்கிறேன் சிறந்து
ஆனால்
தனிந்து குணிந்து
இரந்து
வாழ்வில் இகழ்ந்து
நிற்கிறேன் தலை குணிந்து.
இருப்பினும்
ஊரிலே சிறந்து
மிளிர்ந்து
தலை நிமிர்ந்து
நிற்கிறேன் உயர்ந்து
அதனால்
பல பேர் வந்து
தாழ் பணிந்து
சேவகம் புரிந்து
பெருமை சேர்ந்து
நிற்கிறேன் தலை நிமிர்ந்து
சமுகத்தில் இன்று
பல பேர் சேர்ந்து
எனைத் தெரிந்து
தலைவனென உணர்ந்து
நிற்கிறேன் சிறந்து
ஆகவே
எவ்வழியாயினும்
பணம் சேர்த்து
பிணம் வாய் திறந்து
பேசும் பணம்
உன் வசம் இருந்தால்
பலரும் உனைச் சார்ந்து
கிடப்பார் விழுந்து
ஜவ்ஹர்