+இன்று அன்னையர் தினமா+
அன்னையர் தினத்தில் மட்டும்
அன்னை சிந்தனையில்
மற்ற தினமனைத்தும்
ஏனோ திண்ணையில்
இது சரியா?
திரைப்படத்திலும் நாடகத்திலும்
தாயைப்பிரிந்த தனையன்கண்டு
கண்ணில் கலக்கம்
நிஜத்திலோ
அன்னைக்கு கண்ணீர் வருவதே உன்னாலே
இது முறையா?
தாயை கடவுள் போல போற்றவேண்டாம்
ஒரு உற்ற உறவாய்
மதித்தால் போதும்...
தாய்க்கு கொடுக்கவேண்டிய இடம்
மனசு மட்டுமே
முதியோர் இல்லம் அல்ல...
அனைத்து தினமும்
அன்னையர் தினமாய்
அன்னையை கொண்டாடுவோம்..
அன்னையை கலங்கவைத்தால்
நிஜமாக திண்டாடுவோம்...!