வணங்குகிறேன் தாயே

வணங்குகிறேன் தாயே !!!

எல்லோரும் என்னை அடித்து ஏசினாலும்
நீ மட்டுமே என்னை அள்ளி அணைத்து கொண்டாய்

உன்னுள் என்னை வைத்து
சுகமான சுமை தாங்கினாய்
வலிகள் தாங்கி வழி காட்டினாய்

உன் உதிரத்தை பாலாக்கி
என்னுயிர் காத்தாய் !!!

எனக்கு ஒன்று என்றால்
துடித்து போனாய்

நான் கண்ணயர்ந்து தூங்க
நீ கண் விழித்து உன் தூக்கம் தொலைத்தாய்

என் முதல் முத்தம்,முதல் காலடி தடம், முதல் வார்த்தையில்
பரவசம் அடைந்தாய்

எத்தனை வயதானாலும் என்னை
குழந்தையாகவே பாவித்தாய்

உடல் தந்தாய், உயிர் தந்தாய்
யாதுமாகி நின்றாய்

நான் மீண்டும் செல்ல முடியா
இறைவனின் சன்னதி தாயின் கருவறை!!!
நன்றிகள் போதாது,எதற்கும் ஈடு இணையாகாது
வணங்குகிறேன் தாயே !!!!

எழுதியவர் : sakthi (11-May-14, 8:51 pm)
பார்வை : 207

மேலே