vishnugandhi - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : vishnugandhi |
இடம் | : Madurai |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Mar-2013 |
பார்த்தவர்கள் | : 103 |
புள்ளி | : 24 |
நீ தரும்
எதிர்பாராத முத்தங்களால்
நிலை குலைந்து போகிறேன்!!!
மீள்வதற்கு மீண்டும் ஒரு முத்தம் தேவையாய்!!!
முத்தமிட்டு மேனி சிலிர்க்க வைக்கும்
மெல்லிய மழைச்சாரல் !!!
வருடிச்செல்லும் குளிர்ந்த காற்று !!!
பச்சை பசும் வயல் வெளிகள் !!!
பரந்த நீர் பரப்பு !!!
அகவும் மயில் ,கூவும் குயில்,கீச்சிடும் கிளி!!!
நீர் சுரக்க காத்திருக்கும் கருமேகங்கள் !!!
இதற்கு பெயர் தான் ஏகாந்த நிலையோ !!!
இயற்கையோடு ஒன்றி கலந்துவிட்டேன்
நீயோ வைர மாலை கேட்டாய்
நானோ வானில் இருக்கும்
நட்சத்திரங்களை எடுத்து
மாலையாய் கோர்த்து தருகிறேன்
சூடிக்கொள் !!!
நானும் பார்த்தேன் அவளும் பார்த்தாள்
கண்ணடித்தேன் அவளும் கண்ணடித்தாள்
எங்கே என் பின்னே வந்து விடுவாளோ என்று பயம் எனக்கு
நல்லவேளை என் பின்னே வரவில்லை
கோயில் யானை
அவன் அணைப்பில்
வரும் கத கதப்பில்
அவன் விழிகள்
என் விழி மூட
அவன் மூச்சை
நான் சுவாசிக்க
அவன் இதழ்
என் இதழ் சேர
காற்று புக முடியா நெருக்கத்தில்
கனவுகளில் நான் மிதக்க
துயில் கொள்ள வேண்டும்
என் காதல் தலைவனோடு!
காதலுக்கு தாஜ்மஹால்
கற்புக்கு கண்ணகி
வில்லுக்கு விஜயன்
சொல்லுக்கு அவ்வை
தமிழுக்கு பாரதி
கவிதைக்கு கண்ணதாசன்
தானத்துக்கு கர்ணன்
சேவைக்கு தெரேசா
நட்புக்கு உதாரணம் ஒருவர் கூட இல்லையா ?
என்னுள் மையம் கொண்ட பருவகாற்று நீ,
இனி தினம் தினம் என் மனதில்
காதல் மழைதான்!!!!!!!!!!!
தண்ணீர் எங்கே????
வண்ண வண்ண குடங்கள்
வாயை பிளந்து வானம் நோக்கி
தவமியற்றும் குடங்கள்
தாகம் தீர்க்க தண்ணீர் தேடும் குடங்கள்