என் பிள்ளை பெற்றுத் தந்தவளே வாழ்த்துகிறேன்

பேர்சொல்ல பிள்ளையுண்டு -ஆனால்
பெற்றெடுத்த தில்லை !
குறைதீர்க்க குழந்தையுண்டு
கருவறை சுமக்கவில்லை !
மயங்கச்செய்யும் மழலையுண்டு
மசக்கை வந்ததில்லை !
வரமாய் வந்தசேயுண்டு
வளைகாப்பு எனக்கில்லை !
குலம்காக்க குழவியுண்டு
கும்பி பெருத்ததில்லை !
வாட்டம் போக்கவந்தபிள்ளை
வாடகைத்தாய் ஈன்றாளே !
அகம்நிறைந்து வாழ்த்துகிறேன்
அன்னையர் தினத்தினிலே ....!!

எழுதியவர் : ராஜ லட்சுமி (11-May-14, 9:23 pm)
பார்வை : 211

மேலே