அக்கினிக் கங்குகள்

தனிமையின்
கொடுமைகள்
உணர்பவன் நான்..

இணை புறா
பறக்கையில்
சிறகுகள் ஒடிந்து
விழுந்தவன் நான்..!!

ஒவ்வொரு வலியையும்
எழுதிட நினைத்ததும்
எழுதுகோல் விழிகளில்
கருந்துளி விழுகுது
இதுவரை
கண்ணீர் குறையவில்லை
இறுதிநாள் வரும்வரை எழுதிடுமோ..!!

ஒவ்வொரு இரவும்
வெகுண்டெழும் பேனா
இருளிடம் மைதன்னை
நிரப்பிக்கொண்டு
எழுதிக் கொண்டிருக்கின்றது
தனிமை சொல்லும்
கதைகளை எல்லாம்..!!

உக்கிர தாண்டவம்
ஆடிடும் வெக்கை
உயிரினை ஏதோ செய்கின்றது..!!

சித்திரை சிந்திடும்
அக்கினிக் கங்குகள்
சிந்தையிலும் விழுந்து எரிக்கின்றது..!!

ஒத்தடம்
தந்திட நீ இல்லை
உயிரினை குளிர்விக்க
என் அருகினில் இல்லை..!!

இக்கணம் எனக்குத்
தருவதெல்லாம்
பெட்டகப் பாம்பின் தவிப்புகளே..!!

எழுதியவர் : வெ கண்ணன் (13-May-14, 10:53 pm)
பார்வை : 203

மேலே