பெற்றோர் பெற்றெடுக்க வேண்டும்

பெற்றோர் பெற்றெடுக்க வேண்டும் !!!!!


என்ன அழகாய் என் பிள்ளை
ஏதேதோ மொழி பேசுகின்றான்
என்றே எண்ணி உவப்புற்றார் இவனை ஈன்ற பெற்றோரே

அதையே வழியென அமைத்திட்டான்
அந்தப்பிள்ளை தன் வாழ்வில்
அடிப்படை மனிதன் அறிவேனும்
அவனிடம் சிறிதும் காணவில்லை

ஏட்டில் மனனம் செய்கின்றான்
எங்கோ வாந்தி எடுக்கின்றான்
அர்த்தம் ஏதும் புரியாமல்
அரைகுறை அறிவு பெறுகின்றான்

கற்றது கசடுடன் இருப்பதனால்
உற்ற துறையில் நொடிக்கின்றான்
புரியா அறிவின் காரணத்தால்
அறியா மாந்தரை அழிக்கின்றான்

இத்தனை நகழ்வின் அடிப்படையோ
இவனை ஈன்ற பெற்றோர் தான்
தாய் மொழி கல்வி அவசியத்தை
சேயுடன் சேர்த்தே பெற்றிருந்தால்

இவனுடன் மொழியின் பற்றினையும்
இணைத்தே வளர்த்து விட்டிருப்பார்
பிள்ளை செய்யும் சாகசங்கள் பெற்றோர் ஈன்ற வகையில் தான்

இனி பெற்றோர் பெற்று எடுத்திடுக
இன் தமிழையும் சேர்த்தே பிள்ளையுடன்


_______அருள் ஸ்ரீ_____

எழுதியவர் : ARULSHRI (19-May-14, 2:45 pm)
சேர்த்தது : ARULSHRI
பார்வை : 115

மேலே