ஒரு இனத்தின் வாழ்கை

மழைகாலத்து
இராப்பொழுதில்
சிறகடித்து வந்து
படுக்கையறை முழுவதையும்
முற்றுகையிட்டது
ஈசல் கூட்டம்

மின் விளக்கு
ஈசலால் அணைக்கப்பட்டது...
என் துாக்கமும்
கலைக்கப்பட்டது
இருளும்
இடர்ப்பாடும் மட்டும்
நிலையானது

விளக்கை
அணைத்து விட்டு
உறங்க நினைத்தாலும்
இதயத்தில்
இரும்புப்பூட்டு
போடப்பட்டது!

கைதியின்
இறுதியாசை வந்து
மூளையைத்தொட்டது
இறைவனின் படைப்பில்
குறுகிய வாழ்கையல்லவா
ஈசலுக்கு ?
விழித்திருந்தேன்
விடியும் வரை விழித்திருந்தேன்.

குறுகிய வாழ்வை
குதுாகலத்துடன்
முடித்துக்கொண்டது ஈசல்கள்
ஆனாலும்
என் விழிகள்
துயரத்தில் துடிக்கிறது

எழுதியவர் : மிஹிந்தலைA.பாரிஸ் (20-May-14, 11:07 am)
பார்வை : 65

மேலே