அன்வார்தீன் பாரிஸ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அன்வார்தீன் பாரிஸ்
இடம்:  அனுராதபுரம், ,இலங்கை
பிறந்த தேதி :  02-Aug-1975
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-May-2014
பார்த்தவர்கள்:  135
புள்ளி:  91

என்னைப் பற்றி...

பெரிதாக கூற எதுவும் இல்லை சிறு கவிஞன்

என் படைப்புகள்
அன்வார்தீன் பாரிஸ் செய்திகள்
அன்வார்தீன் பாரிஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2015 10:44 pm

…………………………
உயிர்கள் அனைத்தும்
உலகின் பயிர்கள்
விதைத்தவன் இறைவன்
அறுப்பவன் மனிதன்!

கருத்து சற்று சறுக்கி விட்டால்
கழுத்து அறுத்தும் நசுக்கியும்
கொஞ்சம் கூட
இரக்கம் இல்லாமல்
இரத்தம் குடிக்கிறான்
மனிதன் மிருகம்!

சன்மார்க்கம்
சமுதாய வழிகாட்டியானாலும்
சாவுமணியடித்தே
காலம் நகர்த்துகிறான் மனித மிருகம்!

இறைவனின்
சன்மானங்களை திருடும் கூட்டத்திடம்
எப்படித்தான்
உரிமையைப்பேசுவது…?

உரிமையே
உயிர்களைப்பார்த்து அழுதுதானே
கருமம் செய்கிறது…?
எவனிடம் யாருக்கு உரிமை…?
எரிமலைகளிடம்
எப்படித்தான் உரிமை கேட்ப்பது…?

அடுத்தவைகளின்
உரிமைகள் நசுக்கும் பழக்கம்
பிறக்கும் போதே இருக்கும்

மேலும்

அன்வார்தீன் பாரிஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2015 12:07 pm

உன் நினைவுகளின்
சில்லறைக்கனவுகளை
சேமிக்க துவங்கி விட்டேன்
என்
இதய உண்டியவில்

நாளுக்கு நாள்
சில்லறைகள் கூடிக்கொண்டே போகிறது
என்றோ ஒரு நாள்
உண்டியல் உடைக்கப்பட்டு
உன்
இதய வாங்கியில்
நிலையாக காதல் கணக்கில்
வைப்புச்செய்யப்படும்

உன்னிடம்
வட்டியெல்லாம் நான் கேடக்க மாட்டேன்
என் காதல் கணக்கை
நானே பாச வட்டி போட்டு
இரட்டிப்பாக்குவேன்...
இறக்கும் வரை என் காதல் கணக்கு
அன்பால் சுரந்து கொண்டே இருக்கும்
நிலையான வைப்பு என்பதால்

மேலும்

அன்வார்தீன் பாரிஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Sep-2015 12:11 am

துணையாக எவரும் இல்லாமல்
தனியாகப்பிறந்தேன்
துணையோடு வாழ்ந்து
தனியாக இறப்பேன்



மேலும்

அன்வார்தீன் பாரிஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2015 12:18 pm

இரவு விழித்திருந்து
பகலை தாலாட்டும்
இந்த நடுநிசியிலும்
என் விழிகள்
உன் உருவத்தை தாலாட்டுகிறது

என் துாக்கம்
துளையிடப்படுகிறது
உன் நினைவு இயந்திரத்தால்

மூடு பனி உடலில்
ஊசி போடும் என்பதால்
குளிர் திரவம்
உடலில் நுழைந்து விடாமல்
தடித்த கம்பளிக்குள்
உடலை புதைத்தேன்

நுளம்புகள்
இரைந்து கரைந்து கனகனக்கும்
ஓசை காதில் விழுந்ததும்
தூக்கம்
தொலைந்திடாமல் இருக்கவேண்டி
முன்னேற்பாடுகள் செய்தேன்

இரவு எல்லோரினதும்
தாலாட்டுத் தாய் என்பதால்
உறக்கத்தோடு
உறவு கொள்ள நினைத்து
படுக்கையறையில்
பாய் விரித்தேன்

எங்கோ ஓர் இடத்தில்
உன்னையும் இரவு தாலாட்டக்கூடும்
நீ அங்கு
தூக்கத்தோடு தொ

மேலும்

அன்வார்தீன் பாரிஸ் - அன்வார்தீன் பாரிஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2015 7:42 pm

புகைந்து புகைந்து எரிகிறேன்
அடுப்பு ஊதுகிறது
உன் நினைவுகள்

மேலும்

நன்றி 18-Aug-2015 8:33 am
அட மிக நன்று தோழரே... ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 18-Aug-2015 12:51 am
அன்வார்தீன் பாரிஸ் - அன்வார்தீன் பாரிஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2015 9:07 am

இப்பொழுது மரப்பெட்டிகள்
கடுதாசிகளை சாப்பிடுகிறது
வாக்கெடுப்பு நிலையங்களில்

மேலும்

நன்றி 18-Aug-2015 12:03 am
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 17-Aug-2015 11:52 pm
அன்வார்தீன் பாரிஸ் - அன்வார்தீன் பாரிஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2015 6:26 am

என்
இதயம்
கோழிக்குஞ்சானது
உன்
நினைவுப்பருந்து
கொத்தித்தின்பதால்

மேலும்

நன்றி 18-Aug-2015 8:34 am
வித்தியாசமான பார்வை... அழகு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 18-Aug-2015 12:59 am
நன்றி நண்பா 16-Aug-2015 10:33 am
நல்ல கவிதை வாழ்த்துக்கள் 16-Aug-2015 9:49 am
அன்வார்தீன் பாரிஸ் - அன்வார்தீன் பாரிஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Aug-2015 6:26 pm

எல்லாமும்
மாறி மாறி வருகிறது
உன் நினைவுகள் மட்டும்
மாறாமல்
இருந்த வண்ணம் வருகிறது

மேலும்

நன்றி 15-Aug-2015 8:51 pm
நன்று தொடருங்கள் 15-Aug-2015 8:40 pm

சடலத்தின் பேருரை!
....................................

என்னை விட்டு விடுங்கள்
என் வீட்டில்
எவருக்கும் இடமில்லை!

என்னை
ஏழையென்றே புறக்கணித்தீர்கள்
மண் வீட்டுக்கு
எவரும் வர வேண்டாம்
உங்கள் மாளிகை வீட்டில் வாழுங்கள்
இந்த பூவுலகை ஆளுங்கள்
என்னை விட்டு விடுங்கள்!

உம்மாவா...?
வாப்பாவா...?
சகோதரத்துவங்களா...?
எல்லோருக்கும் தலை வணங்குகிறேன்
ஆனாலும் எவரும்
என் வீட்டுக்கு வரவேண்டாம்


என்னை
புறக்கணித்த உறவுகள்
கண் கலங்குகிறார்கள்...
அது முதலைக்கண்ணீரோ
முழுமைக்கண்ணீரோ
எதுவாக இருந்தாலும்
என் வீட்டுக்கு வரவேண்டாம்
மண்ணிப்புத்தருகிறேன்...!
மண்ணிக்கவும் வேண்டுகிறேன்!

என்ன

மேலும்

அடடா அருமை தோழரே... கவிதையும் அதை கையாண்ட விதமும் சிறப்பு... நல்ல கவிதையோட்டமுள்ள படைப்பு... ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 06-Jul-2015 2:55 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (19)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (19)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
நிஷா

நிஷா

சென்னை
மேலே