சடலத்தின் பேருரை

சடலத்தின் பேருரை!
....................................

என்னை விட்டு விடுங்கள்
என் வீட்டில்
எவருக்கும் இடமில்லை!

என்னை
ஏழையென்றே புறக்கணித்தீர்கள்
மண் வீட்டுக்கு
எவரும் வர வேண்டாம்
உங்கள் மாளிகை வீட்டில் வாழுங்கள்
இந்த பூவுலகை ஆளுங்கள்
என்னை விட்டு விடுங்கள்!

உம்மாவா...?
வாப்பாவா...?
சகோதரத்துவங்களா...?
எல்லோருக்கும் தலை வணங்குகிறேன்
ஆனாலும் எவரும்
என் வீட்டுக்கு வரவேண்டாம்


என்னை
புறக்கணித்த உறவுகள்
கண் கலங்குகிறார்கள்...
அது முதலைக்கண்ணீரோ
முழுமைக்கண்ணீரோ
எதுவாக இருந்தாலும்
என் வீட்டுக்கு வரவேண்டாம்
மண்ணிப்புத்தருகிறேன்...!
மண்ணிக்கவும் வேண்டுகிறேன்!

என்னை தூசித்திரிந்தவர்
ஏசி பேசியவர் எல்லோரையும்
பார்த்துச்செல்லும் படி
அழைப்பு விடுக்கிறேன்
என் வீட்டில்
எவரும் தங்க வரவேண்டாம்!

எதிரி;கள்
எவரும் எனக்கு இல்லை
ஆனாலும் கூட
என் வீட்டுக்கு மட்டும்
எவரும் வரவேண்டாம்!

குடும்பத்தினர்
ஒப்பாரி வைக்கின்றனர்
குழந்தைகளின் கண்கள்
சிவந்து விட்டது...
மனம் கவர்ந்த மனைவியின்
முழு நிலா முகம்
ஆமாவாசையாக மாறி விட்டது
ஆனாலும் கூட
என் வீட்டில் இடமில்லை!
எவரும் வரவேண்டாம்!

அது எனது தனியறை
உடலை அளந்து
கட்டிருக்கும் ஒற்றையறை
உங்களுக்கு இடமில்லை
எவரும் வரவேண்டாம்!


நிறுத்துங்கள்
உங்கள் அழுகைகளையும்
புலம்பல்களையும்
நீங்கள்தானே
இந்த வீட்டை அமைத்து
அன்பளிப்பு செய்தீர்கள்...?
என்னை விட்டு விடுங்கள்
எளிய வீட்டில்
எழும்பாமல் உறங்கப்போறேன்

எழுதியவர் : மிஹிந்தலைஏ.பாரிஸ் இலங்கை (5-Jul-15, 9:22 am)
பார்வை : 65

மேலே