எனக்கும் வந்தது காதல்

மனிதக் காதல்
மிருகக் காதல்
பறவைக் காதல்
உலகில் எல்லாம் காதல்
கொண்டு நடக்கையில்

எனக்கும் வந்தது
ஒரு பெண்ணுடன்
மழைக் காதல்

அவள் என்னுள் நனைகிறாள்
என்னுடன் விளையாடுகிறாள்
அவளுக்கும் என் மேல் காதலா ?
தெரியாது !
அவளுக்கு என்னை பிடிக்கும்
என மட்டும் தெரியும்

நான் குளிர்மை தருபவன்
ஆனால் அவள் இடைகளில்
ஓடும் போது எனக்கும்
வியர்க்கிறது

நான் நிறமில்லாதவன்
ஆனால் அவள் நெற்றியில்
விழுந்து தெறிக்கையில்
எனக்கும் நிறமிருக்கிறது

அவளை காண என் பருவ
காலம் வரை தவமிருப்பேன்
அன்றும் அப்படித்தான்
பருவ காலம் வர

நானும் வந்தேன்
அவளும் வந்தாள்
அவளுடன் கை கோர்த்து
ஒரு ஆணும் வந்தான் .

எழுதியவர் : fasrina (5-Jul-15, 10:45 am)
பார்வை : 115

மேலே