எங்களின் விளையாட்டு
இனிக்க இனிக்கப்
பேசும் எங்களின்
பல நாள் இரவுப்
பேச்சுக்கள்
பெரும்பாலும்
சண்டையில்தான்
முடியும்
பெரும்பாலும்
அவள்தான் இருப்பாள்
காரணமாய்
"அவ்வாறு
ஏன் பேசினாள்"
"இருந்தும் அப்படி
சொல்லியிருக்கக்கூடாது"
என எண்ணங்கள்
பலவாறாய் ஓடி
இன்று அவளுடன்
பேசுவதில்லை என
புத்தி நினத்தாலும்
மனம் அலைபேசியையே
உற்று நோக்கிக்கொண்டிருக்கும்
வந்துவிடாதா ஒரு
குறுஞ்செய்தியாவது
அழைப்பாவது என்று
ஒரு வழியாய்
இறுமாப்பு தவிர்த்து
அழைக்க நினைத்த
வேளையில்
வந்துவிட்ட அழைப்பில்
“சாரி மாமா “
எனும் ரெட்டைச் சொல்லில்
அனைத்தையும்தான்
மறந்து தொலைக்கிறேன்.