என் இதயம் உண்டியல் உன் இதயம் வங்கி
உன் நினைவுகளின்
சில்லறைக்கனவுகளை
சேமிக்க துவங்கி விட்டேன்
என்
இதய உண்டியவில்
நாளுக்கு நாள்
சில்லறைகள் கூடிக்கொண்டே போகிறது
என்றோ ஒரு நாள்
உண்டியல் உடைக்கப்பட்டு
உன்
இதய வாங்கியில்
நிலையாக காதல் கணக்கில்
வைப்புச்செய்யப்படும்
உன்னிடம்
வட்டியெல்லாம் நான் கேடக்க மாட்டேன்
என் காதல் கணக்கை
நானே பாச வட்டி போட்டு
இரட்டிப்பாக்குவேன்...
இறக்கும் வரை என் காதல் கணக்கு
அன்பால் சுரந்து கொண்டே இருக்கும்
நிலையான வைப்பு என்பதால்

