வேசம்
மாற்றம் இல்லாத கோலத்தில்
மாறிக்கொண்டு இருக்கிறது புள்ளிகளின் எண்ணிக்கை
வாசம் தந்த பூவில்
வாடாமல் இருக்கிறது
அதை சுமந்து கொண்ட இழைகள்
வீசப்பட்ட காற்றில்
எத்தனையோ வெட்டுக்கள்
வலிபடும் நேரத்தில்
வாய்க்கிறது தென்றலாக
கீழ்வானம் சிவந்து இருந்தாலும்
மேல் வானத்தில் நீடிக்கிறது இருளின் படிமம்
தூரத்தில் அழகாக தெரிந்த நிலவு
பக்கத்தில் இருக்கின்ற பொழுது
வெறும் கல்லாகத்தான் இருக்கின்றாள்
வேசம் இடாத காட்சி
அழகாக இருக்காது
வேலி இல்லாத பூவுக்கும்
பாதுகாப்பு இருக்காது