உரிமைகள் பறிக்கப்படும்

…………………………
உயிர்கள் அனைத்தும்
உலகின் பயிர்கள்
விதைத்தவன் இறைவன்
அறுப்பவன் மனிதன்!

கருத்து சற்று சறுக்கி விட்டால்
கழுத்து அறுத்தும் நசுக்கியும்
கொஞ்சம் கூட
இரக்கம் இல்லாமல்
இரத்தம் குடிக்கிறான்
மனிதன் மிருகம்!

சன்மார்க்கம்
சமுதாய வழிகாட்டியானாலும்
சாவுமணியடித்தே
காலம் நகர்த்துகிறான் மனித மிருகம்!

இறைவனின்
சன்மானங்களை திருடும் கூட்டத்திடம்
எப்படித்தான்
உரிமையைப்பேசுவது…?

உரிமையே
உயிர்களைப்பார்த்து அழுதுதானே
கருமம் செய்கிறது…?
எவனிடம் யாருக்கு உரிமை…?
எரிமலைகளிடம்
எப்படித்தான் உரிமை கேட்ப்பது…?

அடுத்தவைகளின்
உரிமைகள் நசுக்கும் பழக்கம்
பிறக்கும் போதே இருக்கும் போது
எனக்கு என்னதான் உரிமைகள்…?

மனித மனங்களில்
உரிமைகள் பறிக்கும் குணம்
நிரப்பி விட்டதால்
பிறக்கும் சிசுவின் உரிமைகளும்
இழந்தே பிறக்கிறது…!
இனி என்னதான் கிடைக்கப்போகிறது…?
உரிமைகள் பறிக்கப்படும்
சமூகம்தான் மனித மிருகம்

எழுதியவர் : மிஹிந்தலைஏ.பாரிஸ் (14-Nov-15, 10:44 pm)
பார்வை : 54

மேலே