அரும்புகள்

அரும்புகள்

(மாணவர் சமுதாயம்)
(படைப்பு – நாகசுந்தரம் (user : nksonline)

துளிர்த்திடும் அரும்புகளே தீயாய் மலர்ந்திடுங்கள்
களிப்பெய்தி நீங்கள் கவினுற மொழிந்திடுங்கள்
பளிச்சென்று பள்ளிசென்று பாடத்தை படித்திடுங்கள்
வளியாக ஓடிச்சென்று விண்ணிலவை தொட்டிடுங்கள்

அன்புக்கு விலை இல்லை அறிவுக்கு விலை வேண்டாம்
பண்புக்கு வேலை செய்து பக்குவமாய் வாழ்ந்திடுங்கள்
கண்ணதனை புண்ணாக்கும் கைபேசி குறைத்திடுங்கள்
மண்ணிதனை விண்ணாக்கும் விவசாயம் கற்றிடுங்கள்

நாளையென நாள்கடத்தும் நீசவித்தை நீக்கிடுங்கள்
காளையென நிமிர்ந்து நின்று கவலையினை போக்கிடுங்கள்
ஊளையிடும் நாய்நரிகள் ஊரினிலே பலருண்டு அவரிடம்
மூளையினை அடகுவைக்கும் மூர்க்கவழி மாற்றிடுங்கள்

அன்னைதந்தை உறவினிடம் அன்பாக நடந்திடுங்கள்
என்னைபெற்றவ ரிவரென்று இன்முகத்தை காட்டிடுங்கள்
உன்னைசில ரிகழையிலே உர்ரென்ற சினம்மாற்றி
சின்னவன் என்றவரை மன்னித்து மறந்திடுங்கள்

செயற்கையான உணவுவகை சீக்கிரமாய் செரித்திடாது
இயற்கையான இட்டிலிதான் இந்தியாவில் ஒத்துவரும்
பெயரினிலே மயங்கிடாமல் பொங்கலடைசாப்பிடுங்கள்
அயர்வாக இருக்கையிலே நீராரம் அருந்திடுங்கள்

அரும்புகளே அரும்புகளே அருகினிலே வந்திடுங்கள்
கரும்பெனவே இனிப்பான கவிதந்தேன் ஏற்றிடுங்கள்
வரும்பகையை போக்குகின்ற வேல்எனவே வாழ்கையிலே
அருமைமிகு அறிவிதனில் அதிவேகம் காட்டிடுங்கள்

திருட்டு பகை தீச்செயல்கள் தீவிரவாதம் வேண்டாம்
குருட்டு குகை போல மனம் குவிந்திட வேண்டாமே
உருட்டு கட்டையெல்லாம் உள்ளேயே இருக்கட்டும்
இருட்டினில் இந்தியாவை இன்னமும் வைக்காதீர்

ஆசைமிகு அரும்புகளே எத்தனைநாள் மொட்டாவீர்
வாசம் மிகக்கொண்டு விரைவாய் மலர்ந்திடுங்கள்
பாசம் மிகக்கொண்டு பற்றோடு மலர்ந்திடுங்கள்
நீசகுண மகற்றி நன்றாய் மலர்ந்திடுங்கள்

எழுதியவர் : (14-Nov-15, 9:18 pm)
பார்வை : 61

மேலே