அரும்புகள்
![](https://eluthu.com/images/loading.gif)
அரும்புகள்
.............
மனக்குகையைக் குடைகின்றேன்
எண்ணப் புதையல்களின்
பொக்கிஷமாய்..நீ
அரும்புகின்றாய்
என்னுள்...
உன் விழியோர ஈரத்தில்
விழுந்து கிடக்கும்... என்
பார்வைகள்
அரும்புகின்றன ..
தினமும்
அன்பை பொத்தியபடி..
உன் ஞாபகங்ளில்
பூத்துக் குலுங்கும் என்
வார்த்தைகளில்
அடிக்கடி அரும்புகிறது
உன் பெயர்...
உன்னோடு கொஞ்சும்
என் னன்பு..
உன் னிழலுள் என்னை
குடை சாய்க்கையில்...
அரும்பும் நம் பருவம்
அழகிய கவிதை
மெளனத்தில் சயனித்திருக்கும்
இரவில்
அரும்பும் நம் கனவுகள்
பூக்கும் ஓசையின் அதிர்விற்காய்
காத்திருக்கும் வருங்காலம்
என்றும்
நமக்கு பூங்கா வனமே..
...அன்புடன் அமீர் மொனா...