வெற்றியே உன்னிடத்தில்

நான்
நானாக
இருக்கவே
விழைகிறேன் ...
நீயாக
எதையும்
என்னுள்
திணிக்காதே ...
விரும்பி
ஏற்காதவரை
எல்லாமும்
விஷமே ?
என் கனவுகளுக்குள்
என்னை கொஞ்சம்
உலவவிடு ...
எதை சாதித்தாய்
என எப்போதும்
எனை நோக்கி
"ஏளனச் சொல்"
உதிர்க்காதே ...
என் எதிர்பார்ப்புகள்
யார் அறிவர்
என்னைத்தவிர ?
எனக்குத் தெரியும்
என் கனவுகள்
உயிர்ப்புள்ளவையென்று...
பிறருக்கு
புரியவைக்கும்திறன்
என்னுள்
குன்றியிருக்கலாம் ...
அதனாலென்ன ?
கதவுகள் கொஞ்சம்
எனக்காக
திறக்கட்டும் ...
காற்று கொஞ்சம்
என் பக்கம்
வீசட்டும் ...
கவிதை என்னுள்
மழையாக
பொழியட்டும் ...
ஓட்டுக்குள்
ஒடுங்கியிருக்கும்
ஆமைகள்போல்
என் புலனடக்கி
எதிர்ப்புகள் தாண்டி..
கம்பீரமாய் ..
கடந்து செல்வேன்
கட்டாயம்
முட்பாதைகளை கூட ...
விரைந்து செல்லாவிடினும்
விடமாட்டேன்
இலக்கை அடையும்வரை ...
அதுவரை
வருத்தம் கொள்ளாதே
வந்துசேர்வேன் பத்திரமாய்
வெற்றியே உன்னிடத்தில் ...