இயற்கை பாடும் காதல்
முதிர்ந்து கூன் விழுந்த போதிலும்
மோகம் குறையாத ஆற்றங்கரை நாணல்....
இசைமகனின் ரீங்காரத்தில் நாணம் கண்டு
சிவந்து நிற்கும் தாமரை....
பகலவன் கரம் தீண்டி
மடிந்து கொன்டிருக்கும் நிலையிலும்
காதல் தேவதையை தீண்டி மகிழும் நீரலைகள்...
நாசிகளை முட்டி முத்தமிட்டுகொள்ளும்
ஆலமரக் குருவிகள்.....
இனைந்து பாடுகின்ற
இயற்கை மொழி காதல்............