மல்லிகையின் மரணம்

மகிழூந்து நிழலுக்காய்
நின்றது மரத்தடியில்...
கண்ணாடிகளை திறந்துக் கொண்ட
சன்னல்கள் நிர்வாணமாய் ..

குளிர் காற்று வீசினால்
வாசமும் வசமாகட்டுமென
தமிழ்தாசனுடன் எனது பேச்சுகளினூடே
மதுரை மல்லிகை வாங்கி மாட்டினாள்
மகிழூந்துக்குள் என் மனைவி....

இப்போது உள்ளே ஒரே வாசம்..

சன்னல் நிர்வாணத்தினூடே
தேனீ நீந்தி உள் வந்தலைந்தது..

தமிழன்ப தருணைக் கொட்டுமோ
என்று விரட்டினேன் ,
மல்லிகைத் தேன் உண்ண
வந்தவைகளை பட்டினி போட்ட
எனக்கு
தோழர் முனைவர் கன்னியப்பன் இல்ல
சுவைநீர் சுவைக்கவில்லை..
தொண்டையினுள் இறங்கவில்லை...

"மகிழூந்தினுள் ,
மல்லிகை வாடிப்போச்சே அத்தான் "-
மனைவி சொன்னாள்....!!!

எழுதியவர் : அகன் (22-May-14, 10:38 pm)
Tanglish : mallikayin maranam
பார்வை : 116

மேலே