வேண்டும்

கரைய வேண்டும் உன் கரங்களுக்குள்...
விழிக்க வேண்டும் உன் விழிகளுக்குள்...
தஞ்சம் வேண்டும் உன் நெஞ்சுக்குள்...

சிறிது...
பஞ்சமும் வேண்டும் உனை பிரியும் நொடிகளுக்கு...
வீழ்த்த வேண்டும் உன் கோபங்களை....
விழவும் வேண்டும் உன் புன்னகையில்...

ஒரு நொடியேனும்...
மலர வேண்டும் உன் மனதிற்க்குள்...
மறு நொடியே...
மரித்திடுவேன் உன் மடியினில்...

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (24-May-14, 10:00 pm)
Tanglish : vENtum
பார்வை : 111

மேலே