முத்தான காதல் கவிதைகள்
முத்தான காதல் கவிதைகள்
----------------------------------
என் கவிதை
கற்பனை இல்லை
என்னவள் -ஒரு
கண்ணை சுருக்கி
மறு கண்ணால்
கண்ணடித்த வரிகள் ...!!!
--------------------
தன் தாவணியை
கடைக்கண்ணால்
சரிபார்ப்பதுபோல்
என்னை அடிக்கடி
திரும்பி பார்க்கும்
ரகசியம் -காதல்
ரகசியங்களில் ஒன்று ...!!!
--------------------
தன் அக்காவின்
குழந்தையை தூக்கி
வைத்துகொண்டு -அதற்கு
முத்தமிடுவதுபோல்
எனக்கு முத்தம் தருவது
காதல் பரிவர்த்தனையில்
ஒரு வகை ....!!!