அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்
கண்கள் பனிக்கிறது
பாசத்தின் ஊற்று
கண்ணுக்குள் மணியென
கருத்தின் ஆழம்
நெஞ்சத்தின் பாரம்
ஏக்கத்தின் சுமை
தலாட்டும் பாட்டு
தாயின் அன்பு
தாவும் நினைவுகள்
என்னமோ ஏதோ
கொஞ்சமல்ல நேசம்
அள்ள அள்ள புதையல்களாய்
வருந்தி தவமிருந்து
கிடைக்கின்ற முத்துக்களால்
திளைக்கின்றோம் மகிழ்ச்சியினால்
மட்டில்லா இன்பம்
கண்ணீரும் ஆனந்தமும்
கலந்துவர
காலமெல்லாம் நிலைக்கின்ற
களங்கமற்ற அன்பு
காத்திருக்கும் காவலென
பூத்திருக்கும் பூக்களைத்தான்
அன்புக்கும் உண்டோ
அடைக்கும் தாழ்