நான்

நான்,

சோலையின் நடுவே புன்னகை
பூக்கும் மலர் என்றெண்ணினேன்....
பரந்து விரிந்த நீலக்கடலில்
நீந்தும் மீன் என்றெண்ணினேன்....
முகில்கள் கொஞ்சும் ஆகாயத்தில்
மின்னும் நட்சத்திரம் என்றெண்ணினேன்....

என் கனவு கலைந்து
கண்விழித்துப் பார்த்தேன்...
அப்பொழுதுதான் புரிந்தது

நான்,
பாலையின் கள்ளியில்
முளைவிட்ட முள் என்று...
கானல்நீரில் உயிர்வாழத்
துடிக்கும் மீன் என்று...
காற்றில் போராடும்
மெழுகு வர்த்தி என்று...

எனினும் நிஜத்தை மறந்து
கனவில் மனம் களித்தேன்.....

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (26-May-14, 5:43 pm)
சேர்த்தது : கிருஷ்ணநந்தினி
Tanglish : naan
பார்வை : 252

மேலே