தமிழன்னையே நீ

தனிமை என்றுமில்லை
தமிழன்னையுடன் தேடலில்
நிறைவான எண்ணங்கள்
நம்மனதின் இனிமையுடன் ...
எத்தனை நினைவுகள்
அழகான தமிழுடன்
வடித்த உன்அழகுடனை
கவிதையாய் அறிந்தப்பின்னே ...
என்றுன் இனிமை
எதிலும் புதுமை
பழமைதனை உள்நிறுத்தி
புதுமைதனை செயல்படுத்தும் ...
அன்பினை வெளிப்படுத்தி
இறைத்தந்த உயிர்அனைத்திற்கும்
சொந்தமென நீயிருந்து
உலகமெலாம் பெயர்ப்பெற்றிடவே ...
உற்றத்துனையாக நீயிருந்து
தமிழன்னையே இவ்வையகத்தே
பிரவாகமாய் பொங்கிவரும்
சங்கத்தமிழே கற்பனையால் ...
சொல்லெடுத்து வார்த்தெடுத்த
கவிதையாய் ஜொலிக்குதடி
உன்இளமை என்றென்றும்
செம்மொழியாய் இவ்வையகத்தே ...
தமிழன்னைக்கு என் அர்ப்பணிப்பு ...
ந தெய்வசிகாமணி