சிலம்புக்கு ஆரம்

மணவறை மீறிய ஒருவனுக்கு
தன்
மன அறையை பூட்டாமல்
காத்திருக்கிறாள் ஒருத்தி
வல்வரவும்
நல்வரவாகிறது

ஒழுங்கு மீறியும்
ஒழுங்காய் பார்க்கப் படுகிறாள்
பெண்ணொருத்தி
மா கவிக்குள் மாதவி..!

காற் சிலம்பு
போர் செய்கிறது
வாய் முளைத்து சீறுகிறது
மன்னவனை
சின்னவன் ஆக்கி
சின்னாபின்னம் ஆக்கினாள்
கற்புச் சின்னம் கண்ணகி..!

காற் சிலம்பு
காவல் கடந்து
கோவலனுக்காய்
காவலனை
வீழ்த்திய கதை இது

மனைவியால் சேர்க்கப்பட்டவன்
விதியால் துரத்தப் படுகிறான்
விதி விடாது
என்னும் விதி வாய்த்த பகுதி

கள்வன் அல்ல அவன்
கணவன் என்றே
எதிர்த்து சாய்த்தாள்
எடுத்துக் காட்டினாள்
எதிர்த்தது கற்பு என்றே
நெருப்பு
எரிந்து காட்டியது...!

அக்கினிப் பெண்ணொன்று கண்டெடுத்தாய்
இளங்கோ
பாங்காய் பாடலுக்குள் வைத்தாய்
வெந்து தனிந்தது பாட்டு
வந்து கனிந்தது யாப்பு
தந்து போனது வாய்ப்பு..!

அரசியல் பிழைத்தோரை
அறம் பிழைக்க விடாது
என்னும் வரம் வாய்த்த
வனம்..!

கண்ணகிக்குள்
விண்ணகத்தீ
மன்னனின் மதியீனத்தால்
மண்ணகத்தில் தீமூட்டம்

ஆராய்ந்து பாராது
நா வழங்கியதால்
நீ விழுந்தாய் வேந்தோய்..!

போற்றா ஒழுக்கத்தை
போற்றாத போக்கு
மாற்ற முடியாத நொடிகள்
மரண படிகள்
தருணம் ஒவ்வொன்றும்
மரண நொடிகளாய்
அடிகள் காட்டுகிறது

ஆடலரசி
பாடலில் அரங்கேற்றம்..!

கொல்லனின்
சொல் கேட்டு
கொண்டவனை
கொன்ற குற்றத்தால்
கொற்றத்தை
முற்றம் முடித்த கதை
இத்துடன்
முற்றுப் பெறுகிறது என் கவிதை..!

எழுதியவர் : Raymond (27-May-14, 3:28 am)
பார்வை : 188

மேலே